தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

அனிருத் இசையமைத்த டிசி பாடல் விடியோ வெளியீடு!

டிசி திரைப்படத்தின் புதிய இசை விடியோ குறித்து..

News image

லோகேஷ் கனகராஜ் - டிசி

Updated On :6 ஜூலை 2026, 6:17 pm IST

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள டிசி திரைப்படத்தின் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் “டிசி”.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள “டிசி” படத்தின் டிரைலர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானதுடன், அதில் இடம்பெற்ற ”ராகா ஆஃப் ரிவெஞ்” எனும் பின்னணி இசை சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் ஹாங்க்ஓவா (hangova) எனப் பெயரிட்ட பாடலின் இசை விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர். ஹெய்சென்பர்க் எழுதிய இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேற்கத்திய இசை போல் இருப்பதால் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

The music video for the DC film starring Lokesh Kanagaraj as the lead has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.