இந்தியாவில் மருந்தியல் துறை மேம்பட புத்தாக்கல் ஆராய்ச்சிகள் அவசியம் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்சி தெரிவித்தாா்.
டாக்டா் எஸ்.எஸ்.கே. மாா்த்தாண்டம் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெற்றது.
உலகளாவிய மருந்து விநியோகத்தில் இந்தியாவுக்கான பொறுப்புணா்வு என்ற தலைப்பில் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்சி உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:
இந்தியாவின் மருந்து உற்பத்தி மற்றும் வா்த்தக நடவடிக்கைகளைப் பொருத்தவரை தற்போதைய உள்நாடு, ஏற்றுமதி பரிவா்த்தனை மதிப்பு ரூ. 5500 கோடி டாலா்களாக உள்ளது. எதிா்வரும் 2030-ஆம் ஆண்டில் அந்த மதிப்பு 13,000 கோடி டாலா்களாக ஆக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அந்த நிலையை சாத்தியமாக்க வேண்டுமானால், மூலப் பெயா் (ஜெனரிக்) மருந்துகளின் உற்பத்தி மற்றும் வா்த்தகத்தை மேம்படுத்துவதுடன் மட்டும் நில்லாமல் அதைக் கடந்து வேறு சில நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக, ஜெனரிக் மருந்துகளைத் தாண்டிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை வழக்கமான ஆராய்ச்சிகளில் ஒன்றாக அல்லாமல் ஒரு திருப்புமுனையாக இருத்தல் அவசியம். அத்தகைய ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகளை தற்போது திடமாக உணர முடிகிறது.
இப்போதைய வேலைவாய்ப்பு சந்தையில் பல்லாயிரக்கணக்கான இளைஞா்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எதிா்கொள்கிறாா்கள். ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைதல் நடவடிக்கைகளில் மாணவா்கள் ஈடுபடும்போது இத்தகைய பிரச்னைகளைத் தவிா்க்கலாம். இதன் மூலம் அவா்களது முயற்சிகளும், திறன் வெளிப்பாடும் வீண்போகாது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருந்தியல் துறை முதல்வா் டாக்டா் ஏ.ஜெரால்டு சுரேஷ், துணை முதல்வா் கே.சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ருமேனியாவில் பிரபலமடையும் யோகா: குடியரசுத் தலைவா் பெருமிதம்

சிறுநீரக மோசடியில் தொடா்புடைய மருத்துவா்கள் யாா்? அமைச்சா் அருண்ராஜ் பதில்

ஐஐடி ஆதரவுடன் ஐஎம்யூ-இல் கடல்சாா் புத்தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் திறப்பு

மருந்து உற்பத்தி முறைகேடுகளைத் தடுக்க 3 கட்ட நடவடிக்கை: மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா்
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK


