
சிறந்த சின்னத்திரை நடிகையாக ராதிகா தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்புடன் விஷன் புரோ மற்றும் காஸ்மிக் டவுன் நிறுவனங்கள் இணைந்து 2008-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை கடந்த சனிக்கிழமை வழங்கியது.
இதில் சிறந்த நடிகைக்கான விருது "அரசி' தொடருக்காக ராதிகாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது "திருமதி செல்வம்' தொடருக்காக சஞ்சய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநராக குமரன் தேர்வு செய்யப்பட்டார். "திருமதி செல்வம்' தொடருக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான விருதை "கோலங்கள்' திருச்செல்வம் பெற்றார். இசையமைப்பாளருக்கான விருது இமானுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த வில்லி நடிகைக்கான விருது நடிகை வடிவுக்கரசிக்கும், வசனகர்த்தாவுக்கான விருது பாஸ்கர் சக்திக்கும், நகைச்சுவை நடிகருக்கான விருது ஜெயமணிக்கும், ஒளிப்பதிவாளருக்கான விருது வசீகரனுக்கும் வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பழம்பெரும் நடிகை எஸ்.என்.வரலட்சுமிக்கு வழங்கப்பட்டது.
விழாவில் நடிகர்கள் ஜீவா, பாக்யராஜ், டெல்லி கணேஷ், நடிகைகள் குஷ்பு, தேவயானி, சங்கீதா, அபிதா, இயக்குநர்கள் மிஷ்கின், பேரரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.