மனசை எக்ஸ்ரே போட்டு பார்க்க முடியாது: இயக்குநர் திருமலை

மனசை எக்ஸ்ரே போட்டு பார்க்க முடியாது: இயக்குநர் திருமலை

இத்தனை  வருட வாழ்க்கைக்கு விலையாக நாம் பெற்றதென்ன? இழந்தென்ன? என கணக்கு போட்டுப் பார்த்து வாழ முடியாது. கிடைக்கிற தருணத்தை நல்லதாகவோ, கெட்டதாகவோ வாழ்ந்துதான் ஆக வேண்டும். கெட்டதாகவே நினைத்து வாழ்கிற ஒ

இத்தனை  வருட வாழ்க்கைக்கு விலையாக நாம் பெற்றதென்ன? இழந்தென்ன? என கணக்கு போட்டுப் பார்த்து வாழ முடியாது. கிடைக்கிற தருணத்தை நல்லதாகவோ, கெட்டதாகவோ வாழ்ந்துதான் ஆக வேண்டும். கெட்டதாகவே நினைத்து வாழ்கிற ஒருவனைப் பற்றிய கதையைத்தான் ஆக்ஷன் பரபரக்க

சொல்லப் போகிறேன். பரபரப்பாக பேசுகிறார் இயக்குநர் திருமலை. "அகம் புறம்' படத்தின் இயக்குநர்.

"தீ நகர்' படம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் திருமலை.

இனி அவருடன் ஒரு பேட்டி:

அகம் புறம்-என்றால் எதைப் பற்றி பேசப் போகிறீர்கள்?

எப்படிப்பட்ட நல்லவனையும் கெட்டவனாக மாற்றி விடுகிற சூழ்நிலைகள் இங்கு நிறைய உள்ளன. கோபம், வன்மம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், அன்பு என அத்தனை உணர்ச்சிகளும் அடங்கியது மனசு. எப்போது எந்த உணர்வு அதில் சுரக்கும் என எக்ஸ்ரே போட்டு பார்த்து விட முடியாது. தனக்காகவும், தன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து அதை செய்து முடிக்கிற இளைஞனின் வாழ்க்கைதான் கதை. இதை ஆக்ஷன் பின்னணியில் சொல்ல முயற்சி செய்திருக்கிறோம்.

தேடித் தேடி உதவி செய்தவர்கள் ஒரு கணத்தில் புறக்கணித்தால் அவன் எங்கே போவான்? வாழ்க்கையின் தேடலில் எல்லாமும் கிடைத்த ஒரு மனிதனுக்கு அன்பு செலுத்த ஆள்கள் இல்லாத தருணம் எப்படியிருக்கும்?

ஷாம் தமிழில் கவனம் செலுத்தி வெகு

நாள்களாகி விட்டதே?

எப்போதும் நாமெல்லாம் தனி மனிதர்களாக சுருங்கி விட முடியாது. உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தனி மனிதனோ அல்லது ஒரு சமூகமோ தேவைப்படுகிறது. 15 வயதில் வீட்டை விட்டு ஓடி வருகிற ஷாம், பணத்துக்காக ஸ்பெயின் வரைக்கும் பயணமாகிறார். எல்லா கெட்ட வேலைகளையும் செய்து திடீரென ஒரு நாள் திரும்பி பார்க்கும் போது அரவணைக்கவும், அன்பு செலுத்தவும் ஆள் இல்லாத தருணத்தை உணர்கிறார்.  வித விதமான கதைகள், புதிய புதிய ஹீரோயின்கள் என தமிழில் ஒரு கை பார்த்து விட்டு போனவர். இப்போது தெலுங்கில் பரபரத்துக் கிடக்கிறார். மீசை இல்லாமல் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு ஷாம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிவார்.

கிளாமர் மீனாட்சியின் ஸ்பெஷல் என்றாகி விட்டது; இதில் எப்படி வந்திருக்கிறார்?

"ராஜாதிராஜா' படத்துக்குப்பின் கிளாமரே வேண்டாம் என முடிவெடுத்திருந்த பெண். கதை கேட்டதுமே ரொம்ப ஆர்வமாகிட்டார். மங்களகரமாகவும், கிளாமராகவும் பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு இந்த மீனாட்சி புதுசு. கதையொட்டிய கிளாமரை மீனாட்சி இன்னும் செய்யவில்லை. பில்லாவில் வந்த நயன்தாராவை மறக்க முடியுமா? அப்படி ஒரு கேரக்டர்தான் மீனாட்சிக்கு. எதுவும் திணிக்கப்படவில்லை.

பாலிவுட் குயின்கள் காஷ்மீராஷா, மேகாஜான் பாடல்களுக்கு வந்து போகிறார்களாமே?

நம்மூரில் ஆரம்பிக்கிற கதை. ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணமாகுது. தன் பயணத்தில் ஷாம் சந்திக்கிற பெண்களில் மீனாட்சி, காஷ்மீராஷா, மேகாஜான் என எல்லோருமே வந்து போகிறவர்கள்தான். மீனாட்சி மீது மட்டும் ஷாமுக்கு சின்னதாக காதல் இருக்கும். வெளிநாடு என்றாலே ஹோட்டல் டான்ஸ், சூரியக்குளியல்தானே நம் ஞாபகத்துக்கு வரும். உங்கள் ஞாபகத்துக்கு வருகிற எல்லாமும் இதில் இருக்கு. முக்கியமான இடத்தில் ஆனந்தராஜ் இருக்கிறார். சுந்தர் சி.பாபு இசை தாலாட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com