மகளிர் இலவசப் பேருந்துக்கு எதிர்ப்பு; போராட்டம் அறிவிப்பு!என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

ராஜா ராணி இசை வெளியீடு: ரஜினிக்கு அழைப்பு

இந்த அழைப்பிதழை ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கொடுத்து விழாவுக்கு வருமாறு இயக்குனர் அட்லீ அழைப்பு விடுத்தார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:07 am IST

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசீம் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ராஜா ராணி. இந்தப் படத்தை ஷங்கரின் உதவியாளர் அட்லீ இயக்கி இருக்கிறார்.

பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆர்யா நடித்த படங்களிலேயே அதிகபட்சமாக விளம்பரப்படுத்தப்பட்ட படம் இது.

ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் என்று இருவரும் சர்ச்சில் திருமணக் கோலத்தில் இருப்பதுபோன்ற புகைப் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும் படத்தின் டிரைலர், சிங்கிள் டிராக், மற்றும் பாடல் எடுக்கப்பட்ட காட்சி என வெளியிட்டு அமர்க்களப்படுத்தினர்.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை அதாவது(23-ம் தேதி) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிழை பழைய எல்.பி. ரிகார்டு வடிவில் அச்சடித்துள்ளனர். இந்த அழைப்பிதழை ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கொடுத்து விழாவுக்கு வருமாறு இயக்குனர் அட்லீ அழைப்பு விடுத்தார். சூப்பர் ஸ்டாரும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.