“அய்யர் ஐ.பி.எஸ்”, “பொள்ளாச்சி மாப்பிள்ளை” போன்ற படங்களை இயக்கிய அரிராஜன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி நடித்து வரும் திரைப்படம் இளமை ஊஞ்சல்.
இதில் கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி என 5 நாயகிகள் நடித்துள்ளனர். ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் பூபதி ராஜா இசையமைத்துள்ளார். அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம் இது. திடுக்கிடும் சம்பவங்களும், கவர்ச்சி காட்சிகளும், மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத திருப்பங்களும், சஸ்பென்ஸும் நிறைந்த இந்தப் படத்தில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி ஆகிய நடிகைகள் படம் முழுக்க இளமை விருந்து படைக்கிறார்கள். படம் குறித்து இயக்குனர் அரிராஜன் கூறியதாவது: படத்தின் கதைப்படி நாயகிகள் 5 பேரையும் தீவிரவாதிகள் கடத்துகின்றனர். நமீதா போலீஸாக வருகிறார். அவர் எப்படி தீவிரவாதிகளிடமிருந்து அவர்களை மீட்கிறார் என்பது தான் கதை. வழக்கமான கதையாக இருந்தாலும், படத்தை எடுத்திருக்கும் விதம் ரொம்ப புதுசு. பல விஷயங்கள் படத்தில் உள்ளன என்றார்.
மூணாறு, ஒகேனக்கல், ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். தமிழ்,தெழுங்கு ஆகிய மொழிகளில் விரைவில் வெளிவர இருக்கும் ‘இளமை ஊஞ்சல்’ படத்தில் ஷர்வானந்த், அனிஷ், மனீஷ், பிரதீப் உள்பட பலரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









