தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பேட்மின்டன் வீரரை மணக்கிறார் ஆடுகளம் டாப்ஸி

ஆடுகளம் டாப்சிக்கு பெரிய அளவில் படவாய்புகள் இல்லாதநிலையில் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

News image
Updated On :9 ஏப்ரல் 2014, 9:42 am

வேல்முருகன்

ஆடுகளம் டாப்சிக்கு பெரிய அளவில் படவாய்புகள் இல்லாதநிலையில் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போயை காதலித்து வரும் டாப்ஸி  அவர் எந்தெந்த நாடுகளுக்கு விளையாடச் செல்கிறாரோ அங்கெல்லாம் சென்று அவரது விளையாட்டை கைதட்டி ரசித்து வந்தார்.

மேலும் தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கும் அவரை வரவழைத்து வந்தவர், அவருடன் மும்பையிலுள்ள நட்சத்திர ஓட்டல்களிலும் காதலை வளர்த்துவந்தார் இது போன்ற ஏராளமான கிசுகிசுகள் வெளியாயின.

ஆனால் டாப்சியோ, மத்தியாஸ் தனது நண்பர் மட்டுமே என்று கூறிவந்தார். தற்போது டாப்சி சில படங்களில் நடித்துவருகிறார், அந்தபடங்களை முடித்துவிட்டு மத்தியாஸ்ஸை திருமணம் செய்து கொள்ளப்போகிறாராம்.. இருவரது வீட்டிலும் திருமணத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும், இதனையடுத்து விரைவில் சினிமாவில் இருந்துவிடைபெறுவார் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.