1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்கார துரை“.
இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஸ்ரீ திவ்யா. மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாபு, சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவை கவனிக்க படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.எழில்.
படம் பற்றி இயக்குநர் எழில் கூறியதாவது, ”ஜனரஞ்சகமான படம் வெள்ளக்கார துரை. கிராமத்திலும் சரி, நகரத்திலும் சரி வேலை வெட்டி எதுக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் சிலரை பார்த்து வெள்ளகார துரை என்று சொல்வார்கள். அப்படியொரு ஜாலியான கதாப்பாத்திரம் தான் விக்ரம்பிரபுவுக்கு. விக்ரம்பிரபு வில்லேஜ் சப்ஜெக்டில் நடிக்கும் முதல் படம் இது. ரியல் எஸ்டேட்டின் நல்லது, கெட்டதுகளை இதில் தொட்டிருக்கிறோம். எனது 9 வது படம் இது. துள்ளாத மனமும் துள்ளும் முதல் சமீபத்திய தேசிங்கு ராஜா வரை எல்லா படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கு.
இமான் கூட்டணியில் மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா என எல்லா பாடல்களும் மெகா ஹிட். அதையெல்லாம் மிஞ்சும் பாடல்கள் இதில் இருக்கு. ஆயிரம் படங்களுக்கு மேல் விநியோகித்து அத்துறையில் கொடிகட்டி பறக்கும் அன்புசெழியனின் முதல் தயாரிப்பில் உருவான படத்தை நான் இயக்கி இருப்பது எனக்கு பெருமை தான். படப்பிடிப்புக்கு நிறையவே அன்புசெழியன் செலவு செய்து பிரமாண்டமாக எனக்கு உதவினார். படப்பிடிப்பு சென்னை, தஞ்சை மாவட்டங்கள், மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றது. படம் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!

வகுப்பைப் புறக்கணித்து பள்ளி சுவர் ஏறிய மாணவர் தவறி விழுந்து பலி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க அனுமதி!
ஏம்ப்பா, அவன் மாட்டு வண்டி ஓட்டியிருக்கிறானா? கண்ணதாசனிடம் பாரதிதாசன் கேட்ட கேள்வி!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



