கோச்சடையானுடன் ஜெகஜால புஜபல தெனாலிராமன் மோதல்?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோச்சடையான் படத்துக்கு 750 திரையரங்குகள் வரை ஒதுக்குவதாக ஏற்கெனவே திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு 3 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கதாநாயகனாக நடித்துள்ள தெனாலிராமன் படமும் 11 ஆம் தேதி அன்றே வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து சித்திரை திங்கள் "ஜெகஜால புஜபல தெனாலிராமன் பராக்... பராக்... பராக்...!" என்று வடிவேலு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தெனாலிராமன் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இது குறித்து விசாரித்த போது படம் ரீலிஸ் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கோச்சடையானுடன் தெனாலிராமன் மோதுவது கடைசி நேரத்தில் ரத்தாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...