உலக நடப்பு தெரியாமல் சம்பளத்தை மட்டும் உயர்த்தும் இன்றைய ஹீரோக்கள்: கேயார் குமுறல்
சிநேகாவின் காதலர்கள் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைய ஹீரோக்களுக்கு உலக நடப்பு


சிநேகாவின் காதலர்கள் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைய ஹீரோக்களுக்கு உலக நடப்பு தெரியவில்லை ஆனால் சம்பளத்தை மட்டும் உயர்த்த தெரியும் என்று கடுமையாக தாக்கிப்பேசினார்.
அவர் கூறியதாவது: "இன்றைய ஹீரோக்களுக்கு உலக நடப்பே தெரியவில்லை. ஒரு ஹீரோவிடம் இயக்குனர் ஒருவர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்டு மிரண்ட அந்த ஹீரோ கதை சூப்பராக இருக்கிறது. தயாரிப்பாளரை கொண்டு வாருங்கள் நாம சேர்ந்து பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்.
அந்த இயக்குனர் என்னிடம் வந்து அந்த கதை ஏற்கெனவே வெளிவந்து படுமேசாமாக ஓடிய ஒரு படத்தின் கதை என்றார். ஹீரோக்களுக்கு எந்த மாதிரி கதைகள் வருகிறது. எந்த மாதிரி படங்கள் வருகிறது என்பதை பற்றியெல்லாம் தெரியவில்லை. வெளி உலகமே அவர்களுக்கு தெரியவில்லை. விமான டிக்கெட் எப்படி எடுக்க வேண்டும். ரயில் டிக்கெட் எப்படி எடுக்க வேண்டும் என்பதே பலருக்கு தெரியாது. ஆனால் சம்பளத்தை எப்படி உயர்த்த வேண்டும். எப்படி வாங்க வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு படம் ஓடவில்லை என்றாலும் அந்த படத்தின் ஹீரோ அடுத்த படத்துக்கு சம்பளத்தை கூட்டிவிடுகிறார். ஆனால் இயக்குனருக்கு அடுத்த படம் கிடைக்காது. இதுதான் இன்றைய நிலை. சினிமா ஒரு மேஜிக் மாதிரி. வெற்றி தோல்வி வரும் போகும். சினிமாக்காரர்களுக்கு அதைவிட்டால் வேறு வேலை தெரியாது. சினிமா மட்டும் ரிட்டையர்மெண்ட் இல்லாத தொழில் என்றார். மேலும் தொலைக்காட்சி உரிமம் வாங்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தொலைக்காட்சிகளின் கண்டு கொள்ளாததால் 750 படங்கள் தேங்கி கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...