தமிழ் தெரியாததால் காஜல் அகர்வால் புறக்கணிப்பு?
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் அதிக நாட்கள் எடுக்கப்படும், அதேநேரத்தில் பட்ஜெட் படங்கள் அதிகபட்சம் 2 மாதத்திற்குள் எடுத்து முடிப்பார்கள். இந்த சூழலில்


தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் அதிக நாட்கள் எடுக்கப்படும், அதேநேரத்தில் பட்ஜெட் படங்கள் அதிகபட்சம் 2 மாதத்திற்குள் எடுத்து முடிப்பார்கள். இந்த சூழலில் படத்தில் நடிக்கும் நடிகைக்கு தமிழ் தெரிந்தால் சுலபமாக படத்தை எடுக்க முடியும்.
ஆனால் தமிழ் தெரியாத நடிகைகளாக இருந்தால், அவர்களுக்கு வசனத்தை சொல்லி கொடுப்பதில் அதிகப்படியான நேரம் ஆகும் என்பதால் படப்பிடிப்பு காலதாமதம் ஆகும். எனவே தமிழ் பேசதெரியாத நடிகைகளை நடிக்கவைப்பதற்கு தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் தயங்குகின்றனர்.
இந்நிலையில் நடிகை காஜல்அகர்வாலுக்கு தமிழ் தெரியாது என்பதால் அவரை படாதிபதிகள் தவிர்ப்பதாக கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. அதேநேரத்தில் நயன்தாரா, அமலாபால் போன்ற நடிகைகளுக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால் தயாரிப்பாளர்கள் விரும்பி புக் பண்ணுவதாக கூறப்படுகிறது.
இது கதிர்வேலன் காதல் படத்தை அடுத்து, உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்தில் முதலில் காஜல் நடிப்பதாக இருந்ததாகவும், பின்னர் நடிக்காதது இந்த பிரச்னைக்காகத்தானாம். இது குறித்து அறிந்த காஜல் தமிழ் கற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...