வசூல் என்றால் இது வசூல்! மிரளவைக்கும் பாகுபலியின் முதல் மூன்று நாள் வசூல் நிலவரம்!

படத்தில் மட்டுமல்ல வசூலிலும் இதன் பிரமாண்டம் தொடர்கிறது. ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அதிலும் சூப்பர் ஹிட் ...
வசூல் என்றால் இது வசூல்! மிரளவைக்கும் பாகுபலியின் முதல் மூன்று நாள் வசூல் நிலவரம்!
Updated on
1 min read

வசூல் என்றால் இது வசூல் என்று திரையுலகினர் ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ளது பாகுபலியின் வசூல் வேட்டை. படத்தில் மட்டுமல்ல வசூலிலும் இதன் பிரமாண்டம் தொடர்ந்து வருகிறது.

உலகம் முழுக்க 4000 திரையங்குகளில் வெளியான பாகுபலி, கடந்த வெள்ளியன்று மட்டும் 63 கோடி ரூபாயை உலகம் முழுவதிலும் இருந்து வசூல் செய்தது (இந்தியாவில் ரூ. 50 கோடி + வெளிநாடுகளில் ரூ. 13 கோடி). அடுத்த நாளே வசூலில் 100 கோடியைத் தாண்டி சாதனை செய்தது. இரண்டே நாளில் இதுவரை வேறு எந்த இந்திய சினிமாவும் 100 கோடியைத் தொட்டதில்லை.

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளன்று (வெள்ளி) தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சேர்த்து 5.10 கோடியை அள்ளியது. அடுத்தநாளில் 5.15 கோடி. நேற்றோடு மொத்தமாக 3 நாள்களும் சேர்த்து 17 கோடி வரை தமிழ்நாட்டில் வசூல் ஆகியுள்ளது.

பாகுபலி ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அதிலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ஹிந்தியில் மட்டும் முதல் 3 நாளில் 22.35 கோடி வசூல்! இதற்கு முன்னால் டப்பிங் படங்களில் அதிகம் வசூலித்த எந்திரனின் 21 கோடி சாதனையை பாகுபலி மிஞ்சிவிட்டது.

அமெரிக்காவில் வியாழக்கிழமை பாகுபலியின் தமிழ் & தெலுங்குப் படங்களின் பிரிவியூ நடந்தது. அதிலேயே வசூல் அமர்க்களமாக இருந்தது. அங்கு முதல் மூன்று நாள்களில் மட்டும் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் சேர்த்து ரூ. 23 கோடி கிடைத்துள்ளது. இதில் தெலுங்கின் பங்கு மட்டும் ரூ. 22 கோடி.

ஒட்டுமொத்தமாக, முதல் மூன்று நாள்களில் உலகம் முழுக்க 155 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பாகுபலி. இதன் வசூல், வெகுவிரைவில் 200 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com