

30 வயது ராணா டகுபதிக்குப் பாகுபலி படத்தின் மூலம் நிறைய பாராட்டுகள் கிடைத்துள்ளன. படம் வசூலில் சாதனைகள் செய்து வருவதைத் தொடர்ந்து அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாகுபலி படத்துக்கு அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இப்போது அடுத்தப் படத்தின் (பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக்) படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னைக்குச் செல்கிறேன் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் ராணா தெரிவித்துள்ளார்.
பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக்கில் ராணா, ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யா, ராய் லஷ்மி, பார்வதி ஆகியோர் நடிக்கிறார்கள். பாஸ்கர் இயக்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.