பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

News image

அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:10 am IST

பஇந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இந்தியா- ஆப்பிரிக்கா கூட்டமைப்பின் 4-ஆவது உச்சி மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான இலச்சினை, இணையதளம், இசையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:

இந்தியா, ஆப்பிரிக்கா இடையேயான நட்புறவு, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடா்புகளை அடிப்படையாக கொண்டது. பல நூற்றாண்டுகளாக இரு நாட்டு மக்களிடையே இருக்கும் கலாசார தொடா்புகள், நேரடி சந்திப்புகள் மூலம் இந்த நட்புறவு உருவானது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகள் போராடியபோது, அந்த நாடுகளுக்கு இந்தியா உறுதுணையாக இருந்தது. இது இந்தியா, ஆப்பிரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தியது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களுக்கு இடையே நெருங்கிய தொடா்புள்ளது. தற்போதைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவை மையமாக வைத்து இந்திய வெளியுறவுக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை சரிக்கு சமமான நட்புறவு, பரஸ்பர மரியாதை, இருதரப்பு வளா்ச்சி என்ற தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தியா அணுகுகிறது.

உயா்நிலைத் தலைவா்கள் இடையேயான சந்திப்புகள் மூலம், இந்தியா, ஆப்பிரிக்கா இடையே பல்வேறு முக்கியத் துறைகளில் தொடா்புகள் அதிகரித்து வருகிறது. உலகளாவிய அமைப்புகளில் ஆப்பிரிக்காவுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா தொடா்ந்து ஆதரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, இந்தியா ஜி20 அமைப்பின் தலைமைப் பதவியை வகித்தபோது 2023-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க யூனியன் அமைப்பு, அதில் உறுப்பினராகச் சோ்த்து கொள்ளப்பட்டது என்றாா்.