ஜூலையில் இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!

2015-2017-ம் ஆண்டுக்கான தேர்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம்...
Updated on
1 min read

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது.

இப்போது இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன் உள்ளார். 2015-2017-ம் ஆண்டுக்கான தேர்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:

2015-2017 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிப்பு:

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் 05-07-2015 அன்று 157, N.S.கிருஷ்ணன் சாலை, வடபழனி, சென்னை-600 026 என்ற முகவரியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் (கமலா திரையரங்கம் அருகில்) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படவேண்டிய புதிய நிர்வாகம் கீழ்க்கண்டவாறு அமையும்.

தலைவர் – 1, துணைத்தலைவர்கள் – 2, பொதுச்செயலாளர் – 1, இணைச்செயலாளர்கள் – 4, பொருளாளர் – 1, செயற்குழு உறுப்பினர்கள் – 12.

தேர்தல் நாள் ஜூலை 5 ஞாயிறு (05-07-2015).

தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் விதிமுறைகள் சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். தேர்தலைப் பொறுத்த வரையில் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது.   

குறிப்பு: 2014-ம் ஆண்டு சந்தாவை செலுத்தியவர்கள் மட்டுமே 5-7-2015 தேர்தலில் வாக்களிக்க முடியும். சந்தா செலுத்தாதவர்கள் வாக்களிக்க முடியாது. 2014-ம் ஆண்டு சந்தாவைச் செலுத்த கடைசி தேதி 15-06-2015. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2014-ம் ஆண்டு சந்தாவோடு, 2015-ம் ஆண்டு சந்தாவையும் செலுத்தியிருக்க வேண்டும். சந்தா செலுத்த கடைசி தேதி, 15-06-2015. 2015-ம் ஆண்டு சந்தா பாக்கி இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

தேர்தல் குறித்த மேலதிக தகவல்களைப் பெற www.tantis.org இணையதளம் மற்றும் tantis tantis Facebook சென்று பார்க்கவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com