கவுண்டமணியின் பிறந்தநாளான மே 25 அன்று அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஒரேடியாக கவுண்டமணியின் புகழ் பாடி பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடினார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் முழுக்க அவருடைய பிரபலமான வசனங்களை அதிகம் காணமுடிந்தது. கடந்த சில வருடங்களாக அவர் படங்களில் நடிப்பதை மிகவும் குறைத்துவிட்டாலும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் மட்டும் குறையவில்லை என்பது அந்த நாளில் நிரூபணமானது.
பிறந்தநாள் தினத்தன்று எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படப்பிடிப்பில் கலந்துகொண்டார் கவுண்டமணி. அவர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. சமூகவலைத்தளம் முழுக்க கவுண்டமணியின் பிறந்தநாள் பற்றிய பேச்சாக இருந்ததால் படப்பிடிப்புக் குழுவினரும் கவுண்டமணியின் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பினார்கள். கேக் வெட்டி பெரிய பார்ட்டி நடத்தவும் திட்டமிட்டார்கள்.
ஆனால், கவுண்டமணி அனைத்துக்கும் மறுப்பு சொல்லிவிட்டார். தனக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை, அதனால் படப்பிடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று சொல்லிவிட்டதால் கொண்டாட்டங்களுக்கு வழியில்லாமல் போய்விட்டது. அதேசமயம், படப்பிடிப்பு முடிந்தபிறகு அனைவரும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள மட்டும் அனுமதியளித்தார். பிறந்தநாள் பரிசுகள் எதுவும் தரக்கூடாது என்கிற கட்டளையுடன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


