

இது நம்ம ஆளு பட விவகாரம் தொடர்பாக நயன்தாரா மீது புகார் தெரிவிக்கவில்லை என சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:
நயன்தாராவைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவருடைய மீதிச் சம்பளமான 50 லட்சத்தைத் தரவும் மீதமுள்ள இரு பாடல்களுக்குத் தேதிகள் வாங்கவும் தாயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகினோம். சங்கத்திடம் பணம் தந்து அவருடைய தேதிகளை வாங்கித் தரச் சொன்னோம். இதுபற்றி கடிதம் எழுதித் தரச் சொன்னார்கள். அப்படியே கொடுத்தோம். அது எப்படி புகார் ஆகும்? நயன்தாரா தேதி கொடுத்தால் அந்த இரண்டு பாடல்களையும் படமாக்குவோம். இல்லாவிட்டால் அவை இல்லாமல் படத்தை வெளியிடுவோம். எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. நயன்தாரா எப்போதும் என் நண்பராக இருப்பார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.