
நடிகை பாவனா சினிமா தயாரிப்பாளர் ஒருவரைத் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
15 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பாவனா, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் கன்னட தயாரிப்பாளர் ஒருவரைக் காதலித்து வருவதாக பாவனாவின் தாயார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். திருமணத் தேதியை பாவனாவே விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். பாவனாவின் காதலர் பற்றிய விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.
பாவானாவும் ஒரு பேட்டியில், நாங்கள் இருவரும் நீண்டகாலமாகக் காதலித்து வருகிறோம். 2014-லிலேயே எங்களுடைய திருமணம் நடந்திருக்கும். ஆனால் நான் சினிமாவில் மும்முரமாக இருந்ததால் திருமணம் தாமதமாகிவிட்டது. இந்த ஜனவரியில் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது எனது தந்தை காலமாகிவிட்டார். எனவே நான் அதைப் பற்றி திட்டமிடுவதை நிறுத்திவிட்டேன். திருமணத்துக்குத் தயாராகும்போது அதை அனைவருக்கும் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







