காதல் விவகாரம் தொடர்பாக ஹிருத்திக் - கங்கனா கடும் மோதல்! பாலிவுட்டில் பரபரப்பு!

காதலர்களாக செய்திகளில் வலம் வந்த ஹிருத்திக் ரோஷனும் (42) கங்கனா ரனாவத்தும் (28) தற்போது சராமாரியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
காதல் விவகாரம் தொடர்பாக ஹிருத்திக் - கங்கனா கடும் மோதல்! பாலிவுட்டில் பரபரப்பு!
Updated on
2 min read

காதலர்களாக செய்திகளில் வலம் வந்த ஹிருத்திக் ரோஷனும் (42) கங்கனா ரனாவத்தும் (28) தற்போது சராமாரியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

டிசம்பர் 2000-ம் ஆண்டில் ஹிருத்திக் ரோஷனும் சுசன்னேவும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. பிறகு கருத்துவேறுபாடு காரணமாக 2013ல் பிரிந்தார்கள். மே 2014ல் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். அடுத்தச் சில மாதங்களில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. கங்கனா ரனாவத்துடன் காதலில் இருந்ததால்தான் இந்த மணமுறிவு ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இருவரும் கைட்ஸ், கிரிஸ் 3 என இரு படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.

முட்டாள்தனமான காரியம்!

இதற்குப் பிறகு ஹிருத்திக் - கங்கனா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிய நேர்ந்தது. கங்கனா, ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், முன்னால் காதலர் ஏன் முட்டாள்தனமான காரியங்களைச் (silly ex) செய்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். பெயர் குறிப்பிடாவிட்டாலும் ஹிருத்திக்கைத்தான் குறிப்பிடுகிறார் என்று அனைவருக்கும் தெரிந்தது. ஆசிக் 3 படத்தில் கங்கனா நடிப்பதாக இருந்தது. ஆனால், ஹிருத்திக் தலையிட்டு கங்கனாவைப் படத்திலிருந்து நீக்கினார் என்று செய்திகள் வந்தன. இது தொடர்பாக கங்கனாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குத்தான் அவர் அதுபோல கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக ட்வீட் செய்த ஹிருத்திக் ரோஷன், நான் போப்புடன் பழக சாத்தியமுள்ளதே தவிர ஊடகங்கள் சொல்கிற நடிகையைக் காதலிக்க வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.

நீயா நானா!

இதனையடுத்து திடீரென கங்கனாவுக்கு 5 பக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் ஹிருத்திக். கங்கனாவின் பேட்டி தன் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாகவும், இருவரும் காதலர்களாக இருந்ததுபோல ஒரு தோற்றத்தை உண்டுபண்ணுவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். படத்தில் நடித்தது தவிர இருவருக்குமிடையே வேறு எந்தப் பழக்கமும் கிடையாது. எனவே அந்தப் பேட்டிக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலாக கங்கனாவும் 22 பக்க வக்கீல் நோட்டிஸை ஹிருத்திக்குக்கு அனுப்பினார். கங்கனா ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும். சில்லி எக்ஸ் என்று சொன்னதை ஏன் நீங்கள் உங்களைப் பற்றி சொன்னதாக நினைக்கவேண்டும்? இருவருக்கும் தொழில் ரீதியாக மட்டுமே பழக்கம் என்று ஹிருத்திக் கூறியுள்ளார். ஆனால் ஹிருத்திக்கின் சகோதரியின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு கங்கனா வருகை புரிந்துள்ளார். கங்கனாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கும் ஹிருத்திக் குடும்பத்துடன் வந்துள்ளார். பொது இடங்களில் நடந்த சம்பவங்கள் இவை. இருவருக்குமிடையே உள்ள பழக்கத்தை கங்கனா வெளிப்படையாகவே கூறியுள்ளார் என்று பதில் வக்கீல் நோட்டீஸில் வாதங்கள் செய்துள்ளார் கங்கனா.

இதற்குப் பதிலடியாக, கங்கனா தனக்கு 1439 மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார் என்று கூறியுள்ளார் ஹிருத்திக். ஆரம்பத்தில் தான் என்று நினைத்து வேறொருவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த விவரம் தெரிந்தபிறகு, என்னுடைய அசல் மின்னஞ்சல் முகவரிக்குத் தினமும் ஏராளமான மின்னஞ்சல்களை அனுப்பினார் என்று கூறினார் ஹிருத்திக்.

கங்கனாவும் பதிலுக்கு, ஹிருத்திக் தன்னுடைய மின்னஞ்சலைத் திறந்து இருவருக்குமிடையேயான உரையாடல்களை நீக்கியுள்ளார். அந்த உரையாடல்கள் அவருடைய விவாகரத்துக்கு முன்பு ஏற்பட்டவை. எனவே அந்த மின்னஞ்சல்கள் விவாகரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் திருட்டுத்தனமாக என் மின்னஞ்சலைத் திறந்து இருவருடைய உரையாடல்களையும் நீக்கியுள்ளார் என்று பரபரப்பாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் பேசுவதற்காகவே புதிய மின்னஞ்சலை அவர் உருவாக்கினார். அதிலிருந்துதான் இருவரும் பேசினோம் என்றும் கூறியுள்ளார்.

காதல் விவகாரம் தொடர்பாக ஹிருத்திக் - கங்கனா இதுபோன்று மோதிக்கொள்வது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com