புதிய சாதனை படைத்த ரஜினியின் ‘கபாலி’ டீசர்!

ரஜினிகாந்தின் கபாலி பட டீசரை 24 மணி நேரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
புதிய சாதனை படைத்த ரஜினியின் ‘கபாலி’ டீசர்!
Updated on
1 min read

ரஜினியின் கபாலி பட டீசரை 24 மணி நேரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

லிங்கா படத்தையடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் கபாலி. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் இப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

ரஜினிகாந்துடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

கபாலி படத்தின் டீசர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) வெளியானது. காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியான கபாலி டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினியின் ரசிகர்கள், திரையுலகினர் எனப் பலரும் கபாலி பட டீசரை பகிர்ந்தார்கள். ராம்கோபால்வர்மா, ராஜமௌலி உள்ளிட்ட இயக்குநர்களும் கபாலி படத்தின் டீசரை பாராட்டி தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் 24 மணி நேரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளார்கள்.  இது, இந்திய அளவில் எந்தவொரு நடிகருக்கும் இல்லாத வரவேற்பு. மேலும், ஆசிய அளவிலும் ஒரு சாதனையாக மதிப்பிடுகிறது. 

இதுபற்றி படத்தயாரிப்பாளர் தாணு ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

* சாதனைகள் என்பது மீண்டும் மீண்டும் புதிதாகப் படைப்பதற்கே. தலைவர் தன் பாணியில் நிகழ்த்தியுள்ளார். 22 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்கள்.

* இதுவரையில்லாத அளவுக்கு அதிகபட்ச 60 லட்சம் பார்வையாளர்கள் (யூடியூபில்). தலைவரின் ரசிகர்களுக்கு நன்றி.

</p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com