மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ரஜினியின் 2.0 ராமாயணக் கதையின் தழுவலாமே?

எந்திரனில் ரஜினிக்கு இரட்டை வேடம் மட்டும் தான், ஆனால் 2.0 ல் ரஜினி 5 வித்யாசமான வேடங்களில் கலக்கவிருப்பதாக வதந்திகள் உலவுகின்றன.

News image
Updated On :28 மார்ச் 2017, 6:57 am

சயின்ஸ் ஃபிக்ஸன் திரைப்பட வரிசையில் ரஜினியின் ‘எந்திரன்’ திரைப்படம் அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை மாஸ் ஹிட்! ஆனால் 2017 ல் வரவிருக்கும் தீபாவளி ரிலீஸாக அறிவிக்கப்பட்டிருக்கும் 2.0 அதை விட பக்கா மாஸாகத் தூள் கிளப்பவிருக்கிறதாம். இதுவரை தமிழில் வெளிவந்த சயின்ஸ் ஃபிக்ஸன் திரைப்படங்களைக் காட்டிலும் இதற்கான மெனக்கெடல்கள் இன்னும் அதிகம் என 2.0 படத் தயாரிப்புக் குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் வில்லனாகக் களமிறங்கவிருக்கும் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் படத்தில் ராமாயண ராவணனைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளாராம்.

எந்திரனில் ரஜினிக்கு இரட்டை வேடம் மட்டும் தான், ஆனால் 2.0 ல் ரஜினி 5 வித்யாசமான வேடங்களில் கலக்கவிருப்பதாக வதந்திகள் உலவுகின்றன. இரண்டு ரஜினிகளுக்கே படம் மாஸ் ஹிட். 2.0 ல் டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி ரோபோ தவிர மேலும் இரு குள்ள வேடங்களிலும் ரஜினி தோன்றவிருக்கிறாராம். அதோடு வில்லனாக நடிக்கும் அக்‌ஷய் குமாருக்கு படத்தில் 12 விதமான வித்யாசமான தோற்றங்களாம்.

அதுமட்டுமல்ல ரஜினியின் இரண்டாவது சயின்ஸ் ஃபிக்ஸன் திரைப்படமான இந்த 2.0,  2D, 3D, Imax 3D மற்றும் Imax ரியல் 3D உள்ளிட்ட வெவ்வேறு விதமான ஃபார்மேட்களிலும் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு தீபாவளி அதிரடி ஆச்சரிய விருந்தளிக்கப் போகிறதாம். தமிழில் வெளியான பிற சயின்ஸ் ஃபிக்ஸன் திரைப்படங்களைப் போலல்லாது, ஆஸ்கர் புகழ் ரஸூல் பூக்குட்டி 2.0 க்காக தனிக்கவனம் செலுத்தி சிறப்பான டால்பி ஆடியோ ஒலியமைப்பையும் தாண்டிய ஸ்பெஷல் ஒலியமைப்புகளைப் பயன்படுத்தி இருக்கிறாராம்.
தமிழ், இந்தி, தெலுங்கு என ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப் பட்டு வரும் 2.0 திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரை தொடவிருப்பதாக அப்படத்தின் இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.