மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :19 மே 2017, 8:23 am

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. டோரா படத்தை போன்று இப்படத்திலும் நயன்தாராவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.