புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’: ஜூலை 30-ல் வெளியீடு

ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு திரைப்படம் ஜூலை 30-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

News image

ஐஸ்வர்யா ராஜேஷ்

Updated On :26 ஜூலை 2021, 1:27 pm

DIN

ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு திரைப்படம் ஜூலை 30-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

குறும்பட இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கோகுல் ஆனந்த், சுபாஷ் செல்வம், ஜீவா ரவி மற்றும் பலர் திட்டம் இரண்டு திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

கதாநாயகிக்கு காட்சியை விளக்கும் இயக்குநர் விக்னேஷ்

கதாநாயகிக்கு காட்சியை விளக்கும் இயக்குநர் விக்னேஷ்

முழுக்க முழுக்க திரில்லர் பாணியில் பல திருப்பங்களுடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் காணாமல் போன குழந்தைப் பருவ நண்பனை தேடும் திரைக்கதை வித்தியாசமான பாணியில் கையாளப்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குநர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, சமூகத்தில் உள்ள சில நிகழ்வுகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இந்த படம் காட்டுகிறது. அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.  சோனி லிவ்வில் திட்டம் இரண்டு வெளியவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் விக்னேஷ், கதாநாயகி ஐஸ்வர்யா

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் விக்னேஷ், கதாநாயகி ஐஸ்வர்யா

கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்

திட்டம் இரண்டு படத்தில் எனது கதாபாத்திரம் பல அடுக்குகளைக் கொண்டது. இந்தக் கதையின் சாராம்சம் என்னை வெகுவாக கவர்ந்தது. நண்பனின் மறைவில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்க ஒருவர் எந்த எல்லைக்கு செல்வார் என்பதை இந்தப் படம் கூறும் விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

ஆதிராவாக ஐஸ்வர்யா ராஜேஷ்  

ஆதிராவாக ஐஸ்வர்யா ராஜேஷ்  

படத்தில் உள்ள திருப்பங்கள் பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும். சோனி லிவ் ஓடிடியில் இதுவே எனது முதல் படம். திட்டம் இரண்டின் வெளியீட்டுக்காக நான் ஆவலாக உள்ளேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.