ஆலியா பட் நடிக்கும் முதல் ஹாலிவுட் திரைப்படம்

பிரபல இந்தி நடிகை ஆலியா பட் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
ஆலியா பட்
ஆலியா பட்

பிரபல இந்தி நடிகை ஆலியா பட் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்தி சினிமாவின் பிரபல நடிகை ஆலியா பட். அவரது கடைசிப் படமான ‘கங்குபாய் கதியவாடி’ திரைப்படம் பாலியல் தொழிலார்களைப் பற்றியது. விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இவர் முதன் முதலாக ஹாலிவுட் படமொன்றில் நடித்துள்ளார். அப்படத்தின் பெயர் ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’. இதில் பிரபல ஹாலிவுட் நடிகை ‘வொண்டர் வுமன்’ படத்தில் நடித்த கால் கோடட் மற்றும் ஜமியா டோர்னன் ஆகியோருடன் அலியா பட் நடித்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்னர் ஆலியா பட்அவரது காதலன், நடிகர் ரன்பீர் கபூருடன் திருமணம் நடைப்பெற்றது. தற்போது அலியா பட் கற்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இவர் நடித்து ‘டார்லிங்ஸ்’, ‘பிரம்மாஸ்திரா’ ஆகிய படங்கள்  விரைவில் வெளியாக இருக்கிறது. 

தனது டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்த ஆலியா பட் கூறியதாவது:

ஹார்ட் ஆஃப் ஸ்டோன்- நீங்கள் தான் எனது முழு இதயம். மிக்க நன்றி அழகியே கால் கோடட். இயக்குநர், ஜமியா டோர்னனை இன்று மிஸ் செய்கிறேன். மறக்க முடியாத அனுபவத்திற்கு படக்குழுவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த அன்புக்கும் அரவணைப்புக்கும் எப்போதும் நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com