’பேர், புகழ் இருக்கு. நிம்மதிதான் இல்லை’: நடிகர் ரஜினிகாந்த்

எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள்தான் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். 
’பேர், புகழ் இருக்கு. நிம்மதிதான் இல்லை’: நடிகர் ரஜினிகாந்த்

எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள்தான் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். 

சுவாமி சுதானந்தா கிரி வழங்கும் ‘இனிய கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அதில் அவர் கூறியதாவது: 

நம்முடைய மனம் கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ இருக்கும். ஆனால் குழந்தைகள் நிகழ்காலத்தில் வாழும். அதனால்தான் அவர்களை எல்லோருக்கும் பிடிக்கிறது. 

நான் எத்தனையோ வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் ஆத்ம திருப்தியான படங்கள் இரண்டுதான். அது ராகவேந்திரா, பாபா மட்டுமே.  

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள். யோகா கற்றுக்கொள்ளுவதனால் பிரச்சினைகளே வராது என்றில்லை அதை சமாளிக்கும் சக்தி, தைரியம் வரும். நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். முகமது, கிருஸ்து, கிருஷ்ணர், புத்தர், பாபா இவர்களின் ஆத்மாக்களை நாம் உணரலாம். கிரிய யோகாவின் மூலம் இவர்களது ஆசியினை பெறலாம். நான் இதை அனுபவித்து இருக்கிறேன். 

உடல் ஆரோக்கியம்தான் மிகவும் முக்கியம். சிறுவயதிலிருந்தே நமது உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது சொத்தை விட்டுவிட்டு செல்கிறோமோ இல்லையோ நோயாளிகளாக கடைசி காலத்தில் இருக்கக் கூடாது. அது அனைவருக்கும் துன்பம். நடந்து கொண்டிருக்கும்போதே அப்படியே இறந்துவிட வேண்டும். சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமலேயே உயிர் பிரிந்துவிட வேண்டும். இரண்டு முறை மருத்துவமனை சென்று வந்தவன் நான். சந்தோஷம் வேண்டுமா நிம்மதி வேண்டுமா என்றால் நிம்மதிதான் வேண்டும் என்பேன்.

சந்தோஷம் வந்து வந்து சென்றுவிடும். நிம்மதிதான் நிரந்தரமானது. பணம், பேர், புகழ் எல்லாத்தையும் அடைந்துவிட்டேன். பெரிய பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலருடனும் பழகிவிட்டேன். சந்தோஷம், நிம்மதி 10 சதவிகிதம் கூட என்னிடம் இல்லை” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com