ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அஜித் வசூலை வீழ்த்திய விஜய்!

அஜித்தின் துணிவு வசூலை விஜய்யின் லியோ முறியடித்துள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2023, 11:04 am

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது.

தமிழகத்தில் பாதுகாப்பு காரணங்களால் அதிகாலை காட்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 9 மணிக்குதான் முதல் காட்சி துவங்கியது. 

ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும், பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: தங்கலான் டீசர் தயார்!

 உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ, முதல்நாளில் ரூ.115 - 125 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ரூ.33 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்.

இந்நிலையில், கர்நாடகத்தில் முதல்நாள் வசூலாக லியோ ரூ.13.65 கோடியை வசூலித்துள்ளதாகவும் இது, அங்கு துணிவு படம் மொத்தமாக வசூலித்தத் தொகையைவிட (ரூ.13.25) அதிகம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கர்நாடகத்தில் துணிவு செய்த வசூலை லியோ முறியடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.