ரீமிக்ஸில் கலக்கும் ‘கிளியே..கிளியே’

ரீமிக்ஸில் கலக்கும் ‘கிளியே..கிளியே’

கிளியே.. கிளியே பாடலின் ரீமிக்ஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
Published on

பழைய பாடல்களை இன்றைய தொழில்நுட்ப தரத்திற்கு ஏற்ப ஒலி மாறங்கள் செய்து பலரும் புதிய ரசனைக்கான இசைத்துணுக்குகளை உருவாக்கி வருகின்றனர். ரீமிக்ஸ் எனப்படும் இந்த வகைப் பாடல்கள் இந்தத் தலைமுறையைச் சார்ந்தவர்களையும் பெரிதும் ஈர்த்து வருகிறது. 

அந்த வகையில், மலையாளத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு மம்மூட்டி, ரோகினி, அஞ்சு பணிக்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஆ ராத்திரி’ படத்தில் இடம்பெற்ற ‘கிளியே..கிளியே’ பாடலின் ரீமிக்ஸ் இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்துள்ளது.

2கே கிட்ஸ் தலைமுறையின், விருப்பப்பட்டியலில் இணைந்த இப்பாடல் பல ரீல்ஸ் விடியோக்களை ஆட்சி செய்து வருகிறது. 

ஆச்சரியமாக, இப்பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா, பூவாச்சல் காதர் வரிகளில் உருவான இப்பாடலைப் பாடியவர் ஜானகி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com