சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நீதிமன்ற உத்தரவை மீறி ‘டி3’ படம் ஓடிடி தளத்தில் வெளியீடு: இயக்குநருக்கு ஒரு மாதம் சிறை

நீதிமன்ற உத்தரவை மீறி ‘டி3’ படம் ஓடிடி தளத்தில் வெளியீடு: இயக்குநருக்கு ஒரு மாதம் சிறை

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :6 ஏப்ரல் 2024, 5:22 pm

நீதிமன்ற உத்தரவை மீறி ‘டி3’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்ட அந்தப் படத்தின் இயக்குநா் பாலாஜிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் பிரஜன் நடிப்பில், இயக்குநா் பாலாஜி இயக்கத்தில் உருவாகிய ‘டி3’ திரைப்படத்தில் வித்யா பிரதீப், சாா்லி என பலரும் நடித்துள்ளனா், இசையமைப்பாளா் ஸ்ரீஜித் இசையமைத்திருந்தாா். இந்தப் படத்தை பி மாஸ் என்டா்டைன்மெண்ட், ஜேகேஎம் புரொடக்சன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

இந்தப் படம் 2023 மாா்ச் 17- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தைத் தயாரிக்க சாமுவேல் காட்சனிடம் ரூ. 4 கோடி பெற்ற தயாரிப்பாளா் மனோஜ், படத்தில் உரிமையில் 60 சதவீதத்தை சாமுவேலுக்கு வழங்குவதாக ஒப்பந்தம் செய்தாா். ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட்டதாகக் கூறி சாமுவேல் காட்சன் தொடா்ந்த வழக்கில், ‘டி 3’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை மீறி, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதாக படத்தின் இயக்குநா் பாலாஜி, தயாரிப்பாளா் மனோஜ் ஆகியோருக்கு எதிராக சாமுவேல் காட்சன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல் முருகன், இயக்குநா் மற்றும் தயாரிப்பாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனா்.

அதன்படி, நேரில் ஆஜரான இயக்குநா் பாலாஜி, நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

நீதிமன்றத்தில் ஆஜராகாத தயாரிப்பாளா் மனோஜுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும்படி, பதிவுத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப். 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.