பட்டர் ஃபிளை... பட்டர் ஃபிளை...! 180 கோடி பார்வைகளை கடந்த பள்ளி சிறுமிகள் விடியோ!

கடந்த சில நாள்களாக இன்ஸ்டாகிராமில் பள்ளி சிறுமி பாடிய பட்டர் ஃபிளை (பட்டாம்பூச்சி) பாடல் வைரலாகி வருகிறது.
பட்டர் ஃபிளை... பட்டர் ஃபிளை...! 180 கோடி பார்வைகளை கடந்த பள்ளி சிறுமிகள் விடியோ!

கடந்த சில நாள்களாக இன்ஸ்டாகிராமில் பள்ளி சிறுமி பாடிய பட்டர்பிளை (பட்டாம்பூச்சி) பாடல் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் திடீரென எந்தப் பாடலாவது வைராகும். அப்படி ஒரு பாடலாக 4 வருடங்களுக்கு முன்பு சிறுமி பாடிய பாடல்கள் வைரலாகி வருகின்றன. அதில் முதலில் பட்டர்பிளை... பட்டர்பிளை பாடல் மிகவும் வைரலாகியது.

பாஹமதி
பாஹமதி யூடியூப்

பாஹமதி எனும் சிறுமி இந்தப் பாடலைப் பாட உடன் சிறுமிகள் கூட்டாக இணைந்து அழகான நடனமாட ஆசிரியர் இதமான தாளமிட சிறுமிகளின் நடனத்தைப் பார்க்க அத்தனை ஆனந்தமாக இருக்கிறது.

முதலில் பட்டர்பிளை பாடல். பின்னர் ஆப்பிள் ஆப்பிள் ரெட் ரெட் ஆப்பிள் வெரி வெரி ஸ்வீட் ஆப்பிள் எனும் பாடலில் சிறுமிகள் ஒவ்வொரு பழங்களின் பெயர்களை சொல்லும் விடியோ வைரலானது.

இந்த விடியோ மட்டும் யூடியூப்பில் 1.8 பில்லியன் (180 கோடி ) பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடியோ பதிவிட்டு 6 வருடங்கள் ஆகிறது.

யார் இந்த சிறுமிகள்:

ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் கல்யாணதுர்கம் மண்டலத்தில் உசிகோட்டா கிராமத்தில் எம்பிபி பள்ளியில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள். இந்தச் சிறுமிகளுக்கு பாடல் நடனம் சொல்லிக் கொடுக்கிறார் அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர். அவர் பெயர் பிக்கி ஸ்ரீனிவாசலு. தனது பெயரிலேயே யூடியூப் பக்கத்தினை உருவாக்கி அதில் 4, 6 வருஷங்களுக்கு முன்பு பகிர்ந்த விடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்கி ஸ்ரீனிவாசலு
பிக்கி ஸ்ரீனிவாசலுயூடியூப்
பட்டர் ஃபிளை... பட்டர் ஃபிளை...! 180 கோடி பார்வைகளை கடந்த பள்ளி சிறுமிகள் விடியோ!
மஞ்சு வாரியரா இது? வைரலாகும் புதிய படத்தின் போஸ்டர்!

தெலுங்கு மொழியில் பாடம் படிக்கும் சிறுமிகளுக்கு ஆங்கிலத்தை எளிதில் புரிய வைக்க இந்த மாதிரி பாடல், நடனம், இசை மூலம் கற்றுத்தருகிறார் பிக்கி ஸ்ரீனிவாசலு .

யூடியூப்

பிரபலங்கள் இந்த சிறுமிகளின் பாடலுக்கு ரீல்ஸ் செய்வதை விடவும் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் இருக்கிறது. மதுரையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் இருந்து வயதான தாத்தாக்கள், பாட்டிகளும் இணைந்து இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டிருக்கிறார்கள்.

இதைப் பார்த்த பலரும் மிகவும் நெகிழ்ச்சியாக கமெண்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com