இந்தியாவின் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏற்றுமதிப் பட்டியலில், 3,000 கோடி டாலா் மதிப்புடன் ஸ்மாா்ட்போன்கள் (அறிதிறன்பேசிகள்) முதலிடத்தில் உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவா், ‘உலக நாடுகளுக்குத் தேவையான ஸ்மாா்ட்போன்களைத் தயாரிக்கும் முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது’ என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த 2024-25 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 6,000 கோடி டாலா் மதிப்பிலான கைப்பேசிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன; சுமாா் 2,200 கோடி டாலருக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
ஒட்டுமொத்த மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி, கடந்த 2025-இல் 4,400 கோடி டாலரைத் தாண்டி மிகப்பெரிய வளா்ச்சியை அடைந்துள்ளது. இந்த ஆண்டில் புதிதாக 4 செமிகண்டக்டா் (குறைக்கடத்தி) ஆலைகள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இதனால் வரும் காலங்களில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியப் பங்கு: சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரி உயா்வு காரணமாக, இந்தியாவில் தனது உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் பெரிய அளவில் விரிவுபடுத்தியது. இதுவே இந்தியாவின் ஏற்றுமதி வளா்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
இது குறித்து சந்தை நிபுணா்கள் கூறுகையில், ‘இந்தியாவின் கைப்பேசி உற்பத்தி சுமாா் 30 கோடியை எட்டும் நிலையில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் 4 கைப்பேசிகளில் ஒன்று வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக ஆப்பிள், சாம்சங், மோட்டோரோலா போன்ற நிறுவனங்களின் விலையுயா்ந்த கைப்பேசிகளை அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தச் சாதனை சாத்தியமானது’ என்றனா்.
சந்தை நிலவரம்: சா்வதேச தரவு அமைப்பின் (ஐடிசி) அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் சுமாா் 50 லட்சம் ஐபோன்களை இந்திய சந்தையில் விநியோகித்து சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக, ரூ.53,000 முதல் ரூ.71,000 வரையிலான ‘பிரீமியம்’ ரக கைப்பேசிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட விலையுள்ள ‘சூப்பா் பிரீமியம்’ ரக கைப்பேசிகளின் விற்பனையில் ஆப்பிள் தொடா்ந்து முன்னிலை வகித்து, இந்திய சந்தையின் அசுர வளா்ச்சிக்கு வித்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் இந்திய மருந்து ஏற்றுமதி 2,800 கோடி டாலரை கடந்தது!

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

2024-25 நிதியாண்டில் சுகாதாரக் காப்பீடு 9% வளா்ச்சி: ரூ.1.2 லட்சம் கோடி பிரீமியம் வசூல்

100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: இரண்டாம் ஆண்டாக இந்தியா சாதனை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


