சின்னத்திரையில் கையில் காயம்பட்டதுபோன்று நடித்துவரும் நடிகை, மீனா செல்லமுத்துவுக்கு உண்மையிலேயே கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகை திவ்யா கணேஷ் உடன் கோயிலுக்குச் சென்று பதிவிட்டுள்ள படத்தில் கையில் கட்டுடன் இருப்பதைக் கண்டு, 'அது உண்மைக்காயம்தானா'' என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருபவர் நடிகை கம்பம் மீனா. சின்னத்திரை மட்டுமல்லாது சினிமாவிலும் நடித்துவரும் குணசத்திர பாத்திரங்களில் நடித்துவருகிறார். இதனால், ரசிகர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமானவர்.
தொடரில் கையில் கட்டுடன் நடிக்கும் கம்பம் மீனா - dinamani
தற்போது அவர் நடித்துவரும் தொடரில் கையில் கட்டுடன் நடித்து வருகிறார். அது திரையில் கதைக்காக அப்படி நடித்துவருவதாக பலர் நினைத்திருந்தனர்.

காயம் ஏற்பட்டபோது எடுத்த படங்கள்
இதனிடையே மகாநதி தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை திவ்யா கணேஷுடன் கோயிலுக்குச் சென்று அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் கம்பம் மீனா பகிர்ந்துள்ளார்.

நடிகை திவ்யா கணேஷ் உடன் கம்பம் மீனா
அதில் கையில் கட்டுடன் காணப்படுகிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில், உண்மையிலேயே கையில் காயம் ஏற்பட்டுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒழுக்கம் விழுப்பம்... சாக்ஷி அகர்வாலை விமர்சிக்கும் ரசிகர்கள்!

சித்தார்த் - அதிதி ராவ் தம்பதியினரின் சமீபத்திய க்ளிக்ஸ்

க்யூட் வாலா - மிருணாள் தாக்குர் பிறந்த நாள்! ரசிகர்கள் வாழ்த்து!

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



