/

டெல்லி கணேஷ் மறைவு: மலையாள நடிகர்கள் இரங்கல்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இரங்கல்!

News image

மம்மூட்டியுடன் டெல்லி கணேஷ்

Updated On :10 நவம்பர் 2024, 12:33 pm

நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை(நவ. 9) இரவு காலமானார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் டெல்லி கணேஷ். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பட்டண பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழில் அவர் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, சிந்து பைரவி, நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், ஆஹா, தெனாலி உள்பட பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் குணசித்திரக் கதாபாத்திரமேற்று நடித்திருந்தார்.

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது மலையாளத்திலும் டெல்லி கணேஷுக்கு நட்பு வட்டம் பெரிது. மலையாளத்தில் தேவாசுரம், கீர்த்திசக்ரா, போக்கிரிராஜா, துருவம், காலாபானி உள்பட பல படங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.