விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஆக்‌ஷனில் மிரட்டும் மிஷன் இம்பாஸிபிள் கடைசி பாகம் டீசர்!

டாம் க்ரூஸின் ‘மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங்’ திரைப்பட டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

News image

Paramount Pictures India

Updated On :10 பிப்ரவரி 2025, 3:40 pm

உலகளவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ள ‘மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹாலிவுட் பட ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களுள் ஒன்றான ‘மிஷன்: இம்பாஸிபிள்’ கடைசி பாகமாக படமெடுக்கப்பட்டுள்ள ‘மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங்’ வரும் மே மாதம் 25-ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் இப்படம் திரையிடப்படுகிறது.

இந்த நிலையில், இன்று(பிப். 10) இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள 30 நிமிட டீசர் விடியோவில் சாகசங்களுக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு தீனி போட்டுள்ளார் டாம் க்ரூஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.