
ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கூலியில் இடம்பெற்றுள்ள மோனிகா..., பவர்ஹௌஸ்... ஆகிய இரு பாடல்களும் அனிருத் இசையில் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில், கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆக. 2-ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இப்படத்தின் டிரைலரும் அதே நாளில் வெளியிடப்படும் என்று திங்கள்கிழமை(ஜூலை 28) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி முதல்முறை நடித்துள்ளதால் ரஜினியை கூலியில் லோகேஷ் எப்படி காட்டியிருப்பார் என்ற ஆவலே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.