
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் வெற்றி விழாவில் தனுஷைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்தார் நடிகர் சிரஞ்சீவி.
குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 20 வெளியானது. குபேராவில் தனுஷ் வழக்கம்போல தமக்கே உரிய இயல்பான பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் என்றே பல தரப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் படம் பாராட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, குபேரா படம் வெளியாகிய 3 நாள்களில், குபேரா வெற்றிவிழா ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 22) ஹதராபாத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மேடையில் பேசிய சிரஞ்சீவி, குபேராவில் தேவா கதாபாத்திரத்தை தனுஷைத் தவிர வேறு எவராலும் இவ்வளவு வெற்றிகரமாகச் செய்து காட்டியிருக்க முடியாதெனப் பேசினார்.
தனுஷின் நடிப்புக்கு தேசிய விருது வழங்க வேண்டும். அவருக்கு அந்த சிறப்பு கிடைக்கவில்லையென்றால், அந்த விருதுகளுக்கே அர்த்தமில்லாமல் pஓய்விடும். சிறப்பாக நடித்திருந்தார் தனுஷ் என்று தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.
அதேபோல, நாகார்ஜுனாவையும் இயக்குநர் சேகர் கம்முலாவையும் சிரஞ்சீவி வெகுவாகப் பாராட்டினார்.
இவ்விழாவில் சிரஞ்சீவி தனுஷை இறுக்கி அணைத்து கட்டிபிடித்துப் பாராட்டியதில் தனுஷ் நெகிழ்ச்சியடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.