பழம்பெரும் நடிகை காஞ்சனாவை நினைவிருக்கிறதா? காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம், சிவந்த மண் உள்ளிட்ட அந்நாளைய பிளாக் பஸ்டர் படங்களின் நாயகி. காஞ்சனாவுக்கு இப்போதும் 60 களில் தனி ரசிகர் கூட்டம் உண்டு என்பதெல்லாம் சொல்லித் தெரியவேண்டிய செய்தியில்லை. அவரைப் பற்றி இப்போதென்ன புதுச்செய்தி என்றால் சரித்திரப் புகழ் பாகுபலி- 2 ல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கச் சொல்லி காஞ்சனாவை அப்படத்தின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜ மெளலி அணுகினார். காஞ்சனாவுக்கும் ராஜமெளலி இயக்கத்தில் அதிலும் வசூலில் பட்டையைக் கிளப்பிய படமான பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தான். அவருக்கு கொடுக்கப் பட்ட கதாபாத்திரம் குரூரம் கலந்த வில்லத்தனத்துடன் இருந்தது கூட காஞ்சனாவுக்குப் பிரச்சினையில்லை. ஆனால் படப்பிடிப்புக்காக காஞ்சனா ஜோத்பூர் செல்ல வேண்டி இருந்தது. ஜோத்பூரில் தற்போது நிலவும் சீதோஷ்ணம் காஞ்சனாவுக்கு ஒத்துக் கொள்ளாததால் அவர் ராஜமெளலியின் பாகுபலி- 2 ல் நடிக்க முடியாமல் திரும்பி விட்டாராம்.
பல வருடங்களாக திரையுலகில் இருந்தும், நடிப்பிலிருந்தும் ஒதுங்கி இருந்த நடிகை காஞ்சனா சமீபத்தில் தான் தெலுகு சினிமாவான ‘அர்ஜூன் ரெட்டி’ மூலமாக தனது கலை உலக மறு பிரவேஷத்தைத் தொடங்கி இருந்தார். விரைவில் அவர் தமிழ் சினிமாக்களிலும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோருக்குப் பாட்டியாகத் தோன்றுவார் என எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தித் திணிப்பை ஏற்கிறதா அதிமுக, என்டிஏ கூட்டணிக் கட்சிகள்? - முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


