பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

விஜய் சேதுபதி தயாரித்த படத்திற்கு வெளியாகும் முன்னே சர்வதேச விருது!

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற படத்திற்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:55 am

DIN

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற படத்திற்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு  இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 8-ந் தேதி முதல் நடந்து வந்த ‘பயாஸ்கோப் என்னும் சர்வதேச திரைப்பட விழா’ நேற்றுடன் முடிவடைந்தது. இந்த விழாவில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த திரைப்பட விழாவில்தான் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வழங்கபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.