சென்னை: நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் தனது மகள் சுப்புலக்ஷ்மி ஜோடியாக நடிக்கிறார் என்று பரவிய தகவலுக்கு நடிகை கவுதமி விளக்கமளித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடிகர் கமலுடன் வாழ்ந்து வந்த நடிகை கவுதமி சமீபத்தில் அவரை விட்டு பிரிந்தார். தனது மகள் சுப்புலக்ஷ்மியின் எதிர்காலம் கருதிதான் இந்த முடிவை எடுத்ததாக அப்போது அவர் அறிவித்தார்.
இந்நிலையில் கவுதமியின் மகளான சுப்புலட்சுமி, நடிகர் தனுஷ் நடிக்க உள்ள 'வேலையில்லா பட்டதாரி-2' வில் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் நேற்று ஒரு தகவல் பரவியது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கவுதமி, 'என்னுடைய மகள் குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்திதான். பொதுவாக நான் வதந்திகளுக்கு விளக்கமளிப்பதில்லை. ஆனால் இது என் மகளின் எதிர்காலம் பற்றியது என்பதால் விளக்கம் கொடுக்கிறேன். என்னுடைய மகள் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். நடிப்பு பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

ஸ்காட்லாந்துக்கு எதிராக நெய்மர் 100% விளையாடுவார்..! பயிற்சியாளர் அன்செலாட்டி உறுதி!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி! சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்வு!!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



