ரஜினி - ஷங்கரின் 2.0: ஃபர்ஸ்ட் லுக் விரைவில்!
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.


ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.
சமீபத்தில் 2.0 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. கடந்த 3 மாதங்களாக ஓய்வில் இருந்த ரஜினி மீண்டும் 2.0 படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். படத்தின் மூன்றில் இரண்டு பகுதிக் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார். இந்நிலையில் படத்தின் விளம்பரங்கள் தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
நவம்பர் 20 அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது. அதேபோல பொங்கல் அன்று படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...