புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின்  நடிப்பில் உருவாகியுள்ள 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம்  நவம்பர் 11-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2016, 9:42 am

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின்  நடிப்பில் உருவாகியுள்ள 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம்  நவம்பர் 11-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு-கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் எல்லாம் முன்னரே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . படம் எப்போது வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், நவம்பர் 11-ந் தேதி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.