அரசியல் அறிக்கைகள் மூலம் ஆதாயம் தேடவேண்டிய அவசியம் இல்லை: சிம்பு

காவேரி பிரச்சினையில் கருத்து தெரிவித்து அதன் மூலம் எந்த விதமான அரசியல் ஆதாயம் தேட வேண்டிய  அவசியம் இல்லை என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
அரசியல் அறிக்கைகள் மூலம் ஆதாயம் தேடவேண்டிய அவசியம் இல்லை: சிம்பு
Updated on
1 min read

காவேரி பிரச்சினையில் கருத்து தெரிவித்து அதன் மூலம் எந்த விதமான அரசியல் ஆதாயம் தேட வேண்டிய  அவசியம் இல்லை என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை  எதிர்த்து கர்நாடகாவில் இரண்டாவது நாளாக கலவரங்கள் நீடித்து வருகின்றன. இந்நிலையில் காவிரி விவகாரம் தீரும் வரை கர்நாடகாவில் எனது படங்கள் திரையிடப்படாது என்று நடிகர் சிம்பு தெரியவித்ததாக நேற்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அதை மறுத்து சிம்பு தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று இன்று வெளியானது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நான் தற்போது தாய்லாந்தில் எனது 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தின் கடைசி கட்டப்  படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறேன். காவிரி நீர் பங்கீடு விவாகரத்தில் நான் கருத்து தெரிவித்திருப்பதாக எனது தந்தை மற்றும் நலம் விரும்பிகளிடம் இருந்து, தகவல் கிடைத்தது.

ஒரு பொறுப்புள்ள குடிமகனாக எனது கடமைகளையும் எல்லைகளையும்  உணர்ந்தே இருக்கிறேன். இந்த விவகாரத்தில் நான் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது இரு  மாநிங்களுக்கிடையேயான பிரச்சினை. இதில் நடிகர்கள் தலையிட்டு கருத்து கூறவோ, எளிதாக நடந்து கொள்வதற்கோ ஒன்றுமில்லை.

ஒரு நல்ல பருவமழை பொழிந்து இரு மாநில மக்களும் பயனடைய வேண்டும் என்று பிரார்திப்பது நமது கடமையாகும்.

இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில்,  அரசியல் அறிக்கைகள் மூலம் ஆதாயம் தேட விரும்பும் கடைசி ஆள் நானாகத்தான் இருப்பேன்.

இவ்வாறு சிம்பு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com