குற்றப்பரம்பரை திரைப்படத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் சுழன்று கொண்டிருந்தாலும் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பிரச்சினை குறித்த தமது கருத்தை தெளிவாக முன் வைத்தார். குற்றப்பரம்பரை கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ரத்னகுமார் கூறி வரும் நிலையில் உங்களுடைய குற்றப்பரம்பரை அதிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்ற கேள்விக்கு வேலராமமூர்த்தி கூறியதாவது;

சர்ச்சையைக் கிளப்புபவர்கள் எனது குற்றப்பரம்பரை நாவலை ஒரு முறை முழுதும் வாசித்தால் எனது நாவலின் களம் வேறு, மாந்தர்கள் வேறு, நான் கையாண்ட பிரச்சினை வேறு என்பது புரிந்திருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த குறிப்பிட்ட சில கிராமங்களில் அந்தக் காலகட்டத்தில் 'குற்றப்பரம்பரை' என முத்திரை குத்தப்பட்டு வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அவர்கள் சிந்திய ரத்தத்தின் பிசு
பிசுப்புக் குறையாமல் பதிவு செய்ய வேண்டும் என்பது தான் எனது நாவலின் நோக்கம். அதை அந்த நாவலில் நான் வெற்றிகரமாகச் செய்திருக்கிறேன். இதில் உணர்வுப்பூர்வமான விஷயம் என்னவெனில் அன்றைய பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடுகள் அனைத்திலும் இந்தக் குற்றப்பரம்பரைச் சட்டம் நடப்பில் இருந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இந்தச் சட்டம் இன்னும் கடுமையாக அந்தச் குறிப்பிட்ட சமூகங்களை சார்ந்த பெண்களின் கருவிலிருக்கும் குழந்தையைக் கூட குற்றப்பரம்பரை என முத்திரை குத்தும் அளவுக்கு கடுமையாக மாற்றப்பட்டு திருத்தங்களுடன் (Criminal Tribals Act) 1911 ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அந்தச் சட்டத்தினால் குற்றப்பரம்பரை என முத்திரை குத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சுமார் 89 உட்பிரிவினர் மிகக் கடுமையாக பாதிப்படைந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட சமூக அந்தஸ்து பறிக்கப்பட்டு கீழ்நிலைக்கு தள்ளப்பட்ட அந்த மக்களது வாழ்க்கையைப் பதிவு செய்தே ஆக வேண்டும் எனும் பெருங்கோபத்தில் நான் அந்த நாவலை எழுதினேன். அதை இன்றைய சூழலில் அதன் வலியும், வேதனையும் குறையாமல் சர்வ தேசத் தரத்தில் எடுக்கக் கூடிய திறன் இயக்குநர் பாலாவுக்கு மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன். என்று தன் கருத்தை எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி விளக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


