பாரதிராஜா - விதார்த் இணைந்து நடிக்கும் படமான ‘குரங்கு பொம்மை’யை இயக்கியுள்ளார் நித்திலன். கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் நித்திலன் கூறும்போது:
மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறேன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். வித்தார்த்துக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் என்ற கேரளப் பெண் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பைக் கதைக்கருவாக வைத்து படம் இயக்கியுள்ளேன்.
இப்படத்தின் மூலம் அஜனீஷ் லோக்நாத் என்கிற இசையமைப்பாளர் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. மொத்தம் 3 பாடல்கள். இதில் நா.முத்துக்குமார் 2 பாடல்களை எழுதி இருக்கிறார்.
நடிகர் விதார்த் என்னுடைய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்கிற குறும்படத்தை பார்த்து என்னை அழைத்தார். என்னைப் பாராட்டி ஒரு படம் பண்ணலாம் என்று கூறினார். நானும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் கதையைக் கூறினேன். கதை அவருக்குப் பிடித்தது.
பின்னர், பாரதிராஜா சாரிடம் கதையை சொல்ல முதலில் தங்கினேன். அவரை சந்தித்து கதையைச் சொன்னேன். கேட்டவுடனே நன்றாக இருக்கிறது என்னுடைய குறும்படத்தை அவர் ஏற்கெனவே பார்த்துப் பாராட்டியிருக்கிறார். இந்தப்படம், என்னுடைய ‘புதிர்’குறும்படத்தின் தாக்கத்தில் உருவானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனை

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவுக்கு விழிப்புணா்வு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

