
புகழ்பெற்ற இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள 'சில சமயங்களில்' தமிழ் திரைப்படமானது சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்டன் க்ளோப் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள தமிழ் திரைப்படம் 'சில சமயங்களில்'. ஒரு ரத்த பரிசோதனை நிலையத்தில் தங்கள் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு கொடுப்பதற்காக வரும் எட்டு நபர்களை பற்றிய படம் 'சில சமயங்களில்'.
காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த விருது தொடர்பாக செய்தி நிறுவனமொன்றுக்கு ப்ரியதரிஷன் அளித்த பேட்டியில், 'இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ள 10 படங்களுள் என்னுடைய படமும் ஒன்று. இதிலிருந்து ஐந்து படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படும்; வெற்றி பெறும் படத்தை உலகம் முழுக்க திரையிட முடியும்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.