ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

செளந்தர்யா ரஜினிகாந்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! உருவப் படம் எரிப்பு! (படங்கள்)

ரஜினியின் இளைய மகளும் இயக்குநருமான செளந்தர்யா, விலங்கு நல வாரியத்தின் தூதராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:37 am

DIN

விலங்கு நல வாரியத்தின் தூதராக ரஜினியின் இளைய மகளும் இயக்குநருமான செளந்தர்யா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதற்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திரைப்படங்களில் விலங்குகள் தோன்றும் காட்சிகள் குறித்த ஆலோசனைகளை திரைத்துறையினருக்கு செளந்தர்யா வழங்குவார் என்கிற ஆலோசனையுடன் விலங்கு நல வாரியத்தின் தூதராக செளந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டார். இதற்குப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். 

இந்நிலையில் செளந்தர்யா அப்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அவருடைய நியமனத்தை எதிர்த்து திருச்சியில் தமிழர் வீரவிளையாட்டுப் பேரவைக் கழகமும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு நடைபெறுவதைத் தடுத்த விலங்கு நல வாரியத்தின் தூதராக செளந்தர்யா பணியாற்றக்கூடாது. அப்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். செளந்தர்யாவின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டன.

தமிழர் வீரவிளையாட்டுப் பேரவையின் தலைவர் ராஜேஷ் இதுபற்றி கூறும்போது: முரட்டுக் காளை படத்தில் காளையை அடக்குவது போல நடித்து, அதனால் கிராமப்புறங்களில் அதிக ரசிகர்களைப் பெற்றார் ரஜினி. தமிழர்களின் ஆதரவுடன் பெரிய நட்சத்திரமான ரஜினியின் மகளான செளந்தர்யா, விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டது வருத்தத்துக்கு உரியது. ஏற்றுக்கொள்ளமுடியாதது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இதை ரஜினி வலியுறுத்தவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்று கூறினார்.  

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.