தேசிய விருதுக் குழு ஒருதலைப்பட்சமானது என்று கருத்து தெரிவித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் தேசிய விருதுக்குழுவை விமரிசித்துள்ளார்.
64-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவுக்கு 6 விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: தேசிய விருதுக் குழுவில் உள்ளவர்களின் செல்வாக்கும் பாரபட்சமும் தெளிவாகத் தெரிகிறது, இது ஒரு தலைப்பட்சமானதே என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பிறகு சர்ச்சைகள் குறித்து தேசிய விருதுக் குழுவுக்குத் தலைமை வகித்த ப்ரியதர்ஷன் பதில் அளித்தார். இந்நிலையில் இதுகுறித்து முருகதாஸ் மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது: தேர்வுக்குழுவினரே, அது என் கருத்து மட்டுமல்ல. இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்தக் குரல் அது. இதுகுறித்து விவாதம் செய்து உண்மையைச் சொல்லாமல் இருங்கள் என்று மீண்டும் விமரிசனம் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


