கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விஜய் சேதுபதியின் 25ஆவது படம் 'சீதக்காதி'

குறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர்,

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:18 pm

DIN

குறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தகரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர், திரை உலகில் எல்லோரையும் அனுசரித்து அரவணைத்து போகிறவர் என்று எல்லா புகழும் ஈன்ற நடிகர் விஜய் சேதுபதி. இவரது 25ஆவது படம் 'சீதக்காதி'. இந்த படத்தை இயக்குபவர், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் திரை உலகின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

விஜய் சேதுபதியும், பாலாஜி தரணிதரனும் இணையும் இரண்டாவது  படம்  'சீதக்காதி'. Passion studios  என்கிற பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கும் 'சீதக்காதி' கதை அமைப்பில் மிக வித்தியாசமானது என்று கருதப்படுகிறது.

'சீதக்காதி' படத்தின் கதைக்கு விஜய் சேதுபதி மிக மிக பொருத்தமானவர். நாங்கள் இணையும் இரண்டாவது படம் இது என்பதையும் தாண்டி, இந்த கதாப்பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி உயிர் வடிவம் கொடுக்க போகிறார் என்பதே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நாங்கள் மீண்டும் இணைய இருக்கும் 'சீதக்காதி' பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இந்த படம் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்' என்று கூறினார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.