நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பிரபாஸ் நடிப்பில் மூன்று மொழிகளில் உருவாகும் சாஹூ!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு சாஹூ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:22 pm

DIN

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம் ரூ. 150 கோடியில் உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு சாஹூ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம்போல இருக்கும். ஆனால் உணர்வுபூர்வமான காட்சிகளும் இருக்கும் என்று பட இயக்குநர் சுஜித் கூறியுள்ளார். யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். பாகுபலி 2 படத்தினிடையே இப்படத்தின் டீசரும் வெளியிடப்படவுள்ளது. 

பெரிய பட்ஜெட் என்பதற்கு உதாரணம்: ஒரே ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ. 35 கோடி வரை செலவு செய்ய உள்ளார்கள். டை ஹார்ட், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற படங்களின் சண்டை இயக்குநரான கென்னி பேட்ஸ், இப்படத்தில் பணியாற்றுகிறார்.

பாகுபலி 2 படத்துக்கு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.