சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அமெரிக்காவில் பாகுபலி 2: முன்பதிவில் மட்டும் ரூ. 19 கோடி வசூல்!

ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ. 64 லட்சம் மதிப்புக்கு ($100,000) டிக்கெட்டுகள் முன்பதிவு...

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 7:11 am

பாகுபலி 2 நாளை வெளியாகிறது. நாளை முதல் பட வசூல் குறித்த சாதனைகளும் தொடர்ந்து வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தப்போவது உறுதி.

அமெரிக்காவில் பாகுபலி 2 படத்தை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது. அங்கு முன்பதிவிலேயே பாகுபலி 2 படம் சாதனை செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

முதல் நாளுக்கான முன்பதிவில் ஏற்கெனவே ரூ. 19 கோடி (3 மில்லியன் டாலர்) கிடைத்துள்ளது, இது எந்த இந்தியப் படத்துக்கும் முன்பதிவில் கிடைக்காத ஒரு வசூல் என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மற்றும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ. 64 லட்சம் மதிப்புக்கு ($100,000) டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றனவாம். 

உலகம் முழுக்க 9000 திரையரங்குகளில் நாளை வெளியாகிறது பாகுபலி 2. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 6500 திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.