சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பிரபல நடிகர் வினோத் கண்ணா காலமானார்!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மும்பையில் மரணம் அடைந்துள்ளார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 12:24 pm

பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மும்பையில் மரணம் அடைந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் காலமான வினோத் கண்ணாவுக்கு வயது 70.

2015-ல் ஷாருக் கான் நடித்த தில்வாலே படத்தில் வினோத் கண்ணா நடித்திருந்தார். அதுவே அவர் நடித்த கடைசிப் படம். குர்பானி, தயவான், மேரே அப்னே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

சமீபகாலமாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாகக் கூறப்பட்டது. இதனால் அவருக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

வினோத் கண்ணாவின் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் சமூகவலைத்தளங்கள் வழியாக இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.